தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டான் பிராட்மேனின் சாதனையைக் குறிவைக்கும் கோஹ்லி

1 mins read
4816f9bd-24ef-422c-a67d-a5b22b213359
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைக் குவித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. - படம்: ஏஎஃப்பி

அடிலெய்ட்: ஆஸ்திரேலிய, இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கவிருக்கிறது.

ஆஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் 295 ஓட்ட வித்தியாசத்தில் வென்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

முதல் போட்டியில் சதமடித்த முன்னணி இந்திய ஆட்டக்காரர் விராத் கோஹ்லி இரண்டாவது போட்டியிலும் தமது நற்செயல்பாட்டைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது போட்டியிலும் அவர் சதமடித்தார் எனில், கிரிக்கெட் பிதாமகனாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனின் ஒரு சாதனையைச் சமன்செய்யலாம்.

வெளிநாடு ஒன்றில், அவ்வணிக்கு எதிராக அதிக சதமடித்தோர் பட்டியலில் பிராட்மேனுடன் கோஹ்லி இணையலாம்.

இங்கிலாந்தில் அந்நாட்டு அணிக்கெதிராக 19 போட்டிகளில் விளையாடி, 11 சதங்களை அடித்துள்ளார் பிராட்மேன்.

கோஹ்லியோ ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு அணிக்கெதிராக 43 போட்டிகளில் விளையாடி, 10 சதங்களை விளாசியுள்ளார்.

இங்கிலாந்தின் ஜேக் ஹோப்ஸ் (எதிரணி - ஆஸ்திரேலியா), இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (எதிரணி - இலங்கை) ஒன்பது சதங்களுடன் அப்பட்டியலின் மூன்றாம் நிலையில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்