மேன்யூ படுதோல்வி, ஆர்சனல் சமநிலை, வில்லா வெற்றி

மேன்யூ படுதோல்வி, ஆர்சனல் சமநிலை, வில்லா வெற்றி

படம்: ஏஎஃப்பி

22 Oct 2026 - 6:17 pm

2 mins read

கோமோ: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் லீக் சுற்றில் புதன்கிழமையன்று (அக்டோபர் 21) நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலியின் கோமோ குழுவிடம் 4-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி படுதோல்வி அடைந்தது.

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே கோமோ அதன் முதல் கோலைப் போட்ட நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் செய்வதறியாது தவித்தனர்.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜோசுவா ஸிர்க்ஸீ அடித்த ஆறுதல் கோல் மட்டுமே தோல்வியின் தீவிரத்தைச் சிறிதளவு குறைத்தது.

கடந்த ஏழு ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றிபெறாத மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகியான மைக்கல் கேரிக் மீது தற்போது அழுத்தம் அதிகரித்துள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் அடுத்த ஆட்டத்தில் ஏஎஸ் ரோமா குழுவை எதிர்கொள்கிறது.

ஜெர்மனியில் நடைபெற்ற மற்றொரு விறுவிறுப்பான ஆட்டத்தில் கடந்த முறை இரண்டாவது இடம்பிடித்த ஆர்சனல் அணி, பயர்ன் மியூனிக் இடையிலான ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆர்சனல் ஆட்டக்காரர் எபரிச்சி எசி முதலில் கோல் போட்டு முன்னிலை தேடித்தந்த நிலையில், மியூனிக்கின் அல்ஃபோன்சோ டேவிஸ், ஹாரி கேன் ஆகியோர் கோல் போட்டுத் தங்கள் அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றனர்.

இறுதியில், ஆர்சனலின் டெக்லன் ரைஸ் போட்ட கோலால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதன் மூலம் ஆர்சனல் ஏழு புள்ளிகளுடனும் பயர்ன் மியூனிக் ஐந்து புள்ளிகளுடனும் உள்ளன.

மற்றோர் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்வேயின் வைக்கிங் அணியை வீழ்த்தித் தனது தொடர் வெற்றிப் பயணத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்