ஐந்து ஆண்டுகள் கழித்து சிங்கப்பூருக்காக ஓடும் சோ

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூரைப் பிரதிநித்துப் போட்டியிடவுள்ளார் உள்ளூர் நெடுந்தொலைவோட்ட வீரர் சோ ருய் யோங். 

இவ்வாண்டு மே மாதம் கம்போடியாவில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூருக்காகக் களமிறங்கவுள்ளார் சோ.

31 வயது சோவுக்கும் சிங்கப்பூரின் தேசிய ஒலிம்பிக் மன்றத்துக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் ஏற்பட்டிருந்ததால் இவர் நீண்டகாலம் விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூருக்குக் களமிறங்காதிருந்தார். 

இப்போது கருத்துவேறுபாடுகளுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளதால் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சட்டக் கல்வி பயின்றுவரும் சோ மீண்டும் சிங்கப்பூரின் தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

5,000, 10,000 மீட்டர் பிரிவுகளில் போட்டியிட சோ தகுதிபெற்றுள்ளார். எனினும், தான் முத்திரை மதித்த நெடுந்தொலைவோட்டப் பிரிவில் இவர் இடம்பெறமாட்டார்.

இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகள் மே மாதம் ஐந்திலிருந்து 17ஆம் தேதிவரை நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!