மெஸ்ஸிக்கு மேலும் ஒரு பெரும் விருது

மெஸ்ஸிக்கு மேலும் ஒரு பெரும் விருது

1 mins read
dd73ecc4-775f-48d1-9641-0451b628048d
படம்: ராய்ட்டர்ஸ் -

அனைத்துலகக் காற்பந்து சம்மேளனமான பிஃபாவின் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண் விளையாட்டாளர் விருதை லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

அர்ஜென்டினா 2022 உலகக் கிண்ணக் காற்பந்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மெஸ்ஸி.

காற்பந்து அணித் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்கள் போன்ற பல தரப்பு மக்களின் வாக்குகள் மெஸ்ஸிக்கு பக்கபலமாக இருந்தன.

மெஸ்ஸி இரண்டாவது முறையாக இந்த விருதை வெல்கிறார்.

பிரெஞ்சு அணியின் கிலியன் இம்பாப்பே இரண்டாவது இடத்தில் வந்தார்.

இந்த ஆண்டு தனக்கு நல்ல ஆண்டாக இருந்தது, பல ஆண்டுகளாகக் கண்ட கனவு இப்போது நனவானது பெரும் மகிழ்ச்சி தருவதாக மெஸ்ஸி கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்