பியுனோஸ் அய்ரஸ்: அர்ஜென்டினாவின் நட்சத்திர காற்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி, 2026 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட விரும்புவதாக அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி கூறியுள்ளார். ஆனால், அதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு இன்னமும் காலம் கனியவில்லை என்று வியாழக்கிழமை (ஜனவரி 30) அவர் சொன்னார்.
கத்தாரில் 2022 உலகக் கிண்ணப் பட்டத்தை வெல்ல அர்ஜென்டின அணியை வழிநடத்திய ஸ்கலோனி, அணியில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான மெஸ்ஸியின் விருப்பம் குறித்து விளக்கினார்.
டிஸ்போர்ட்ஸ் ஊடகத் தளத்திடம் பேசிய ஸ்கலோனி, “மெஸ்ஸியும் அவரின் சகாக்களும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட விருப்பம் கொண்டுள்ளனர். ஆனால், அதற்கு இன்னமும் கணிசமான காலம் இருப்பதை அவர்கள் அறிந்துள்ளனர் என்பதை முதலில் சொல்ல வேண்டும்,” என்றார்.