அட்லாண்டா: அர்ஜென்டினா காற்பந்து அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸி, கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஆக அதிகமுறை (35) இடம்பெற்ற விளையாட்டாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
35வது முறையாக, குரூப் ஏ பிரிவில் வியாழக்கிழமை (ஜூன் 20) கனடாவுக்கு எதிராகக் களமிறங்கினார் மெஸ்ஸி. இதன் மூலம், 1953ஆம் ஆண்டு சிலி நாட்டு கோல்காப்பாளர் செர்ஜியோ லிவிங்ஸ்டோன் படைத்த சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
36 வயதாகும் மெஸ்ஸி, 2007ஆம் ஆண்டு தமது 20ஆம் வயதில் கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியில் முதல்முறை விளையாடினார். 2021ல் அவர் வாகை சூடியது நினைவுகூரத்தக்கது.
கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டிகளில் மெஸ்ஸி 13 கோல்களைப் புகுத்தியுள்ளார்; 17 முறை கோல் போட உதவியுள்ளார்.


