முன்னணி காற்பந்து விளையாட்டாளர் லயனல் மெஸ்ஸிக்குப் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
மெஸ்ஸி, பிரெஞ்சு காற்பந்துக் குழுவான பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காகத் தற்போது விளையாடி வருகிறார்.
அவர் அண்மையில் சவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். பிஎஸ்ஜி அணியிடம் அனுமதி பெறாமல் அவர் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மெஸ்ஸியின் நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாக அவர் விளையாட இரண்டு வாரம் தற்காலிகத் தடை விதித்துள்ளது பிஎஸ்ஜி குழு. அந்த இரண்டு வாரங்களுக்கு மெஸ்ஸிக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அதுபோக வரும் ஆண்டு மெஸ்ஸியின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
இந்த இரண்டு வாரம் மெஸ்ஸி, அணியோடு சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளவும் முடியாது.
2021ஆம் ஆண்டு மெஸ்ஸி பிஎஸ்ஜி குழுவில் சேர்ந்தார்.
சவூதி அரேபியாவின் சுற்றுலாத்துறை தூதராக மெஸ்ஸி உள்ளார். அவரின் வருகை குறித்து அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சு சமூக ஊடகங்களில் பதிவுகளையும் வெளியிட்டிருந்தது.


