டிரம்ப்புடன் கோல்ஃப் ஆடிய டோனி

1 mins read
7c7db0bb-82ec-435c-8408-5393e8063523
அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் (வலது) டோனி (வலமிருந்து இரண்டாவது). - படம்: ஊடகம்

நியூஜெர்சி: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் சேர்ந்து கோல்ஃப் விளையாடியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி.

அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கார்லோஸ் அல்கராஸ் - அலெக்சாண்டர் ஸ்வெரவ் மோதிய காலிறுதி ஆட்டத்தை டோனி நேரில் கண்டு ரசித்த படங்கள் அண்மையில் வெளியாயின.

இந்நிலையில், டிரம்ப்புடன் இணைந்து அவர் கோல்ஃப் ஆடிய காணொளியும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

நியூஜெர்சியின் பெட்மின்ஸ்டரில் உள்ள டிரம்ப் தேசிய கோல்ஃப் மன்றத்தில் அவர்கள் கோல்ஃப் விளையாடினர்.

டிரம்ப்பின் அழைப்பின்பேரில் டோனி அங்கு சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டோனியின் நண்பரான ஹிதேஷ் சங்வி தமது டுவிட்டர் பக்கத்தில் இக்காணொளியை வெளியிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்