ஹியூஸ்டன்: அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) தான் விளையாடும் அமெரிக்க மேஜர் லீக் குழுவான இன்டர் மயாமிக்கு விளையாடமாட்டார் என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து இன்டர் மயாமியுடன் மோதும் ஹியூஸ்டன் டைனமோ, தனது ரசிகர்களுக்கு வருங்காலத்தில் நடக்கவிருக்கும் ஓர் ஆட்டத்துக்கான நுழைவுச்சீட்டை இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.