விளையாட்டரங்கில் ‘விஐபி’கள் மட்டும் மதுவருந்தலாம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

விளையாட்டரங்கில் ‘விஐபி’கள் மட்டும் மதுவருந்தலாம்

1 mins read
a6e5cab4-4c33-473b-b0de-f3ce34106dd9
விளையாட்டரங்குகளில் பொதுமக்களுக்கு மதுவருந்த பிரெஞ்சுச் சட்டம் அனுமதிப்பதில்லை. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் விளையாட்டரங்குகளில் மிக முக்கியமானவர்கள் மட்டும் மதுவருந்த அனுமதி அளிக்கப்படவுள்ளது.

பிரெஞ்சு விளையாட்டரங்குகளில் பொதுமக்களுக்கு மது விற்பதைத் தடைசெய்யும் நோக்கில் 1991ஆம் ஆண்டு அந்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில், அதற்கு விதிவிலக்கு கோரப்போவதில்லை என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.

இதனால், எளிய மக்கள் மென்பானங்களையும் தண்ணீரையும் மட்டும் அருந்தி மனநிறைவடைய வேண்டும்.

‘எவின்ஸ் லா’ என்ற அச்சட்டத்தின்படி, விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர் ஒருவர், ஒரு நகராட்சியில் ஓர் ஆண்டில் அதிகபட்சம் பத்து நிகழ்ச்சிகளில் மட்டும் மது விற்க சிறப்பு அனுமதியுண்டு.

ஆனால், பாரிஸ் ஒலிம்பிக்கைப் பொறுத்தமட்டில், 15 நாள்களில் 700க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளன என்று அவ்விளையாட்டுப் போட்டிகளுக்கான பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்