தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் மீண்டும் விளையாடுகிறார் பி.வி. சிந்து

1 mins read
3d5edbbb-005a-49e3-b582-3fc0acf2fa87
படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூர் பொதுவிருது பூப்பந்து போட்டியில் இந்­தி­யா­வின் நட்­சத்­திர வீராங்­க­னை­ பி.வி. சிந்து பங்­கேற்­கிறார்.

பெண்களுக்கான உலகப் பூப்பந்து தரவரிசையில் 12ஆம் இடத்தில் உள்ள பி.வி. சிந்து கடந்த ஆண்டு சிங்கப்பூர் பொதுவிருது பூப்பந்தை வென்றார்.

போட்டி ஜூன் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடக்கிறது.

கடந்த ஆண்டு ஆண்கள் ஒற்றையர்,பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் போட்டிகளில் விருதுகளை வென்ற அனைவரும் இந்த ஆண்டும் பங்கேற்பதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இம்முறை தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள முன்னணி வீரர்கள் அனைவரும் சிங்கப்பூர் பொதுவிருது பூப்பந்து போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

உள்ளூர் நட்சத்திர விளையாட்டாளர் லோ கியான் இயூவும் விளையாடுகிறார்.

இப்பொதுவிருதின் பரிசுத்தொகை 1.1 மில்லியன் வெள்ளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்