வாயை மறைத்துக்கொண்டு பேசியதற்குச் சிவப்பு அட்டை

வாயை மறைத்துக்கொண்டு பேசியதற்குச் சிவப்பு அட்டை

1 mins read
7c2c5780-7bdb-4646-b928-e1dfb1144cf4
பராகுவேயின் மிகுவேல் அல்மிரோனுக்குச் (நடுவில்) சிவப்பு அட்டை காட்டி ஆட்டத்திலிருந்து வெளியேற்றிய நடுவர். - படம்: ராய்ட்டர்ஸ்

சான்டா கிளாரா: உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் சனிக்கிழமையன்று (ஜூன் 20) பராகுவேயும் துருக்கியும் மோதின. இந்த ஆட்டம் 1-0 எனும் கோல் கணக்கில் பராகுவே குழுவுக்குச் சாதகமாக முடிந்தது.

இதற்கிடையே, ஆட்டத்தின்போது எதிரணி ஆட்டக்காரருடன் ஏற்பட்ட மோதலின்போது தமது வாயைக் கைகளால் மறைத்துக்கொண்டு பேசியதற்காகப் பராகுவே அணியின் மிகுவேல் அல்மிரோன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் ஆட்டத்தின் முற்பாதியில் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, பராகுவே பத்து ஆட்டக்காரர்களுடன் மட்டுமே விளையாடியது.

அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளில் இந்த வாயை மறைத்துக்கொண்டு பேசுவது தொடர்பான விதிமுறையும் அடங்கும்.

காற்பந்து விளையாட்டில் இனவாதத்தை ஒழிக்கும் நோக்கில், எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபடும்போது வாயை மறைத்துக்கொண்டு பேசும் ஆட்டக்காரர்களுக்குச் சிவப்பு அட்டை காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், பேசுவதைத் தாராளமாகப் பேசலாம். வாயை மறைத்துக்கொண்டு பேச வேண்டிய அவசியமில்லை,” என்று ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபேன்டினோ இந்த விதிமுறை குறித்து முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த விதியின்கீழ் தற்போது அல்மிரோன் முதன்முறையாகத் தண்டிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்