‘சீ கேம்ஸ் 2025’: சிலாட்டில் சிங்கப்பூருக்கு முதல் தங்கம்

1 mins read
10f51268-666c-4087-b892-56e82a52b1ba
சிலாட்டில் தங்கம் வென்ற சிங்கப்பூரின் தானி அண்டிகா ரஸாலி. - படம்: பெரித்தா ஹரியான்

பேங்காக்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிலாட் தற்காப்புக் கலைப் போட்டிகளில் சிங்கப்பூர் அதன் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

புதன்கிழமை (சிம்பர் 17) 45 கிலோகிராமுக்கு இடைப்பட்டுள்ள ஆண்களுக்கான ‘டேண்டிங்’ பிரிவு இறுதிச் சுற்றில் சிங்கப்பூரின் தானி அண்டிகா ரஸாலி, 20, வாகை சூடினார்.

முவாங் தோங் தானியில் உள்ள அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் சிங்கப்பூரின் தானி, இந்தோனீசியாவின் கொய்ருதீன் முஸ்டாக்கின்னை 41-21 எனும் ஆட்டக்கணக்கில் வென்றார். முன்னதாக மலேசியாவின் முகம்மது அக்மல் அஸ்மான், பிலிப்பீன்சின் ஹெரோல்ட் ரால்ஃப் உங்காயா ஆகியோரை வென்று இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தார் தானி.

இறுதிச்சுற்றில் தானியை எதிர்த்துக் களமிறங்கிய இந்தோனீசியாவின் கொய்ருதீன், 2023 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் 45 - 50 கிலோகிரோம் எடைக்கான ‘ஏ’ பிரிவில் தங்கம் வென்றவராவார்.

இந்த வெற்றி, தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தானிக்குக் கிடைத்திருக்கும் முதல் தங்கப் பதக்கமாகும். 2023ல் அவர் கூட்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.

குறிப்புச் சொற்கள்