தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷை வீழ்த்திய சிங்கப்பூர்

1 mins read
22f07fa8-91e4-42fe-b519-51cd6c379e48
பந்தைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர பங்ளாதேஷ் ஆட்டக்காரருடன் மல்லுக்கட்டிய சிங்கப்பூரின் நட்சத்திர வீரர் இக்சான் ஃபாண்டி (வலது). - படம்: சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம்

டாக்கா: 2027 ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டி தகுதிச் சுற்றில் பங்ளாதேஷ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோற்கடித்தது.

இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.

சிங்கப்பூருக்காக சோங் வி யங், இக்சான் ஃபாண்டி ஆகியோர் கோல் போட்டனர்.

பங்ளாதேஷின் ஒற்றை கோலை அக்குழுவின் ரகிப் உசேன் போட்டார்.

ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றின் மூன்றாவது சுற்றில் சிங்கப்பூர் அதன் முதல் இரண்டு ஆட்டங்களில் களமிறங்கியுள்ளது.

நான்கு புள்ளிகளுடன் அது தனது பிரிவில் முன்னிலை வகிக்கிறது.

கோல் வித்தியாசத்தில் அது ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

பங்ளாதேஷ் மூன்றாவது நிலையிலும் இந்தியா நான்காவது நிலையிலும் உள்ளன.

ஆறு பிரிவுகள் உள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் குழு 2027 ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும்.

உலகக் காற்பந்துத் தரவரிசையில் சிங்கப்பூர் 161வது இடத்திலும் பங்ளாதேஷ் 183வது இடத்திலும் உள்ளன.

சிங்கப்பூர் அதன் அடுத்த ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது.

இந்த ஆட்டம் அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்