நான்காவது முயற்சியில் கைசேர்ந்த பதக்கம்

நான்காவது முயற்சியில் கைசேர்ந்த பதக்கம்

1 mins read
4358ec58-3eef-4f3c-ba51-2f0ac067f972
படகு வலித்தலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்டெஃபனி சென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் படகு வலித்தல் (கயாக்) வீராங்கனை ஸ்டெஃபனி செனி ஒற்றையர் 500 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 31 வயது ஸ்டெஃபனி பங்கேற்பது இது நான்காவது முறை.

முந்திய முயற்சிகளில் பதக்கம் வெல்லாது ஏமாற்றமளித்த ஸ்டெஃபனி, இம்முறை கிட்டத்தட்ட பாதிப் பந்தயம் வரைக்கும் முன்னிலையில் இருந்தார். ஆயினும், சீன வீராங்கனை லி டோங்யின் கடைசி நேரத்தில் அவரை முந்திச் சென்று, தங்கத்தைத் தட்டிப் பறித்தார்.

நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ‘கயாக்’ படகு வலித்தலில் சிங்கப்பூருக்குக் கிடைத்த முதல் பதக்கம் இதுதான்.

குறிப்புச் சொற்கள்