பேங்காக்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் பெண்கள் தரைப்பந்து அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தாய்லாந்து அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தங்கத்தை இழந்தது.
2015, 2019, 2023ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் பெண்கள் தரைப்பந்து அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த மூன்று ஆண்டுகளிலும் தாய்லாந்து அணி இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 16ஆம் தேதி சிங்கப்பூர் ஆண்கள் தரைப்பந்து அணி அரையிறுதி ஆட்டத்தில் பிலிப்பீன்சிடம் 6-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. அதனால் அதற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

