சிங்கப்பூரின் லயன் சிட்டி செய்லர்ஸ் (Lion City Sailors) காற்பந்து குழு ஆசிய சாம்பியன்ஸ் லீக் 2 (Asian Champions League Two) போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் லீக் 2 போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் சிங்கப்பூர் அணி எனச் சாதனை படைத்துள்ளது லயன் சிட்டி செய்லர்ஸ்.
ஏப்ரல் 9ஆம் தேதி அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் லயன் சிட்டி செய்லர்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சிட்னி (Sydney FC) காற்பந்து குழுவை வீழ்த்தியது.
இந்நிலையில், அரையிறுதி ஆட்டத்தின் முதல் இரண்டாவது சுற்றில் லயன் சிட்டி செய்லர்ஸ் 0-1 என்ற கோல் கணக்கில் சிட்னி அணியிடம் தோற்றது.
இருப்பினும் இரண்டு ஆட்டங்களிலும் சேர்த்து லயன் சிட்டி செய்லர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மே 18ஆம் தேதி நடக்கும் இறுதியாட்டத்தில் லயன் சிட்டி செய்லர்ஸ் அணி ஷார்ஜா (Sharjah FC) அணியுடன் மோதுகிறது.