தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வலைப்பந்து: மகுடம் சூடிய சிங்கப்பூர் மகளிர் அணி

1 mins read
2e2333d0-5740-46d0-a207-aee8339844b0
கிண்ணத்துடன் வெற்றிக் களிப்பில் சிங்கப்பூர் வலைப்பந்து மகளிர் அணி. - படம்: வலைப்பந்து சிங்கப்பூர்

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் வலைப்பந்து மகளிர் அணி, ஆசிய வெற்றியாளராக மகுடம் சூடியுள்ளது.

இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள கோரமங்கள உள்ளரங்கில், அக்டோபர் 27ஆம் தேதி ஆசிய வலைப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இதில் சிங்கப்பூரும் இலங்கையும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 67-64 எனும் புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் அணி வாகை சூடி கிண்ணம் ஏந்தியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் சிங்கப்பூர் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி 17-12 எனும் புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தனர்.

ஆனால் இலங்கை துவண்டுவிடாமல் போராடியது.

இடைவேளைக்கு முன்பு புள்ளி இடைவெளியை அது குறைத்துக்கொண்டது.

இடைவேளையின்போது 28-27 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கை 42-39 எனும் புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆனால் ஆட்டம் முடியும் முன் சிங்கப்பூர் அணி ஆட்டத்தைச் சமன் செய்தது.

ஆட்டம் 52-52 எனும் புள்ளிக் கணக்கில் சமநிலையில் முடிய, வெற்றியாளரை நிர்ணயிக்க கூடுதல் நேர ஆட்டம் தேவைப்பட்டது.

இதில் சிங்கப்பூர் 67-64 எனும் புள்ளிக் கணக்கில் வென்றது.

சிங்கப்பூர் அணிக்காக விளையாடிய வீராங்கனைகளில் கே. மிஷாலினி, சிந்து நாயர், ரீனா திவ்யா, அமந்தீப் கோர் ஆகியோரும் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்