ஆசியக் கிண்ண இறுதி போட்டியில் இந்தியா - இலங்கை மோதல்

ஆசியக் கிண்ண இறுதி போட்டியில் இந்தியா - இலங்கை மோதல்

1 mins read
e4b329a3-395b-492c-9632-7b65bfa87b70
இறுதிவரை களத்தில் நின்று, 49 ஓட்டங்களை விளாசி, இலங்கை அணியை வெற்றிபெறச் செய்த சரித் அசலங்கா. - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்றது.

வியாழக்கிழமையன்று இலங்கையும் பாகிஸ்தானும் மோதிய ‘சூப்பர் 4’ சுற்றுப் போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 252ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியின் முகம்மது ரிஸ்வான், அப்துல்லா ஷபீக் ஆகியோர் அரை சதங்கள் அடித்தனர்.

அடுத்து 253 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கியது இலங்கை அணி.

இலங்கையின் குஷால் மெண்டிஸ் - சதீரா சமரவிக்ரம இணை அற்புதமாக விளையாடியது.

மிகச் சிறப்பாக விளையாடிய குஷால் மெண்டிஸ் 87 பந்துகளில் 91 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். 

விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டத்தின் கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அசலங்கா இரண்டு ஓட்டங்கள் எடுத்து, இலங்கை அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

குறிப்புச் சொற்கள்