நெடுந்தொலைவு ஓட்டப் போட்டியில் முதலிடத்தில் வந்த ரேச்சல் சீ

நெடுந்தொலைவு ஓட்டப் போட்டியில் முதலிடத்தில் வந்த ரேச்சல் சீ

1 mins read

ஓசிம் சன்டவுன் நெடுந்தொலைவு ஓட்டப்போட்டி தொடர்ந்து 10வது ஆண்டாக சனிக்கிழமை இரவு முதல் நேற்றுக் காலை வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 27,000 பேர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியின் அரை மாரத்தான் பிரிவில் சிங்கப்பூரின் ரேச்சல் சீ வெற்றிபெற்றார். 34 வயது சீ, நான்கு மற்றும் எட்டு வயதுடைய இரு குழந்தைகளின் தாயாவார். இவர் 1 மணி 32 நிமிடத்தில் 21 கிலோ மீட்டர் தூரத்தை ஓடிக் கடந்தார். இவரைத் தொடர்ந்து இத்தாலியின் குய்லியா பாஸி (1:34:33) நேரத்திலும் சிங்கப்பூ ரரான அய்லின் டான் (1:35:04) நேரத்திலும் வந்து வெற்றி பெற்றனர். ரேச்சல் சீ தனது கணவர் பூன் ஸி லியுடன் போட்டியில் பங்கெடுத்தார். ஆண்களுக்கான அரை மாரத்தான் போட்டியில் சீனாவின் சோங் யாங் யாங் ஒரு மணி 20 நிமிடம் 54 வினாடியில் ஓடி வென்றார்.