புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி பூப்பந்து வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி சீனப் பொது விருது பூப்பந்துப் போட்டியிலிருந்து விலகிய நிலையில் தற்போது ஹாங்காங் பொது விருதுப் பூப்பந்துப் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியதன் காரணமாக சீனாவில் நடைபெற்று வரும் சீனப் பொது விருது பூப்பந்துப் போட்டியில் இவர் களமிறங்கவில்லை. இந்தத் தொடரில் போட்டியிட்ட சாய்னா நேவால், பிவி. சிந்து, பிரனாய் ஆகிய இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர். அடுத்த வாரம் ஹாங்காங் பொது விருதுப் பூப்பந்துப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியிலும் ஸ்ரீகாந்த் கிதாம்பி போட்டியிடமாட்டார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் துபாய் சூப்பர் சீரிஸ் இறுதித் தொடரில் களமிறங்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங் பொது விருதிலிருந்து விலகிய ஸ்ரீகாந்த் கிதாம்பி
1 mins read

