கிரிக்கெட்: இந்தியாவிடம் இலங்கை திணறல்

கிரிக்கெட்: இந்தியாவிடம் இலங்கை திணறல்

1 mins read
b686126b-353a-4baf-96ac-06846c399c1f
-

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டிக் கான முதல் நாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. இரு அணிகளுக்கும் இடை யிலான முதல் டெஸ்ட் சமநிலையில் முடிந்தது. நேற்றைய ஆட்டத்தில் இரண்டு சுழல்பந்து வீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆகியோரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி முதல் இன்னிங் ஸில் 205 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது.

பூவா தலையாவில் வென்ற இலங்கை அணித் தலைவர் சந்திமால் முதலில் பந்தடிக்க முடிவு செய்தார். தொடக்க வீரர் களாக சமரவிக்ரம=கருணா ரத்னே களமிறங்கினர். 20 ஓட்டங்களில் இந்த ஜோடி யை வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா பிரித்தார். பின்னர் வந்த திரிமானே வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத் திருந்தபோது அஸ்வின் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

இலங்கை வீரர் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கக் கோரி நடுவரிடம் முறையிடும் அஸ்வின் (இடது), கோஹ்லி. படம்: ஏஎஃப்பி