ஹாங்காங்: ஹாங்காங் பொது விருது பூப்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து (படம்) தகுதி பெற்றுள்ளார். காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் அகேன் யமகுச்சி யுடன் அவர் மோதினார். இதில் 21-12, 21-19 என நேர்செட் கணக்கில் சிந்து வாகை சூடினார். அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை சிந்து சந்திக் கிறார். உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக் கும் பி.வி. சிந்து, யமகுச்சி யுடன் ஆறு முறை மோதி உள்ளார். இதில் நான்கு முறை பி.வி. சிந்து வெற்றி வாகை சூடியுள்ளார்.
அரையிறுதியில் பி.வி. சிந்து
1 mins read
-

