வெற்றிப் பயணத்தைத் தொடர ஆர்சனல் முனைப்பு

வெற்றிப் பயணத்தைத் தொடர ஆர்சனல் முனைப்பு

1 mins read

லண்டன்: மிலான் காற்பந்துக் குழுவை யூரோப்பா லீக் ஆட்டத்தில் ஆர்சனல் தோற்கடித்ததையடுத்து அதன் நிர்வாகி ஆர்சன் வெங்கர் பெரும் நிம்மதி அடைந்தார். ஆர்ச னல் குழு கடந்த நான்கு இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களில் தொடர் தோல்வியைக் கண்டு வந்த நிலையில் திரு வெங்கர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினார். இங்கிலீஷ் பிரிமியர் லீக் பட்டியலில் ஆறாவது இடத்தில் தத்தளித் துவரும் ஆர்சனல், முன்னணி வகிக்கும் மான்செஸ்டர் சிட்டி குழுவைவிட 33 புள்ளிகள் பின் தங்கி முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.