வென்றால் பட்டம் சிட்டி வசம்

வென்றால் பட்டம் சிட்டி வசம்

1 mins read

மான்செஸ்டர்: இன்றிரவு நடக்கும் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனை டெட் குழுவைத் தோற்கடித்து, இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத் தைக் கைப்பற்றி, சாம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூலிடம் தோற்றதால் கிட்டிய வலியைப் போக்கும் முனைப் புடன் மான்செஸ்டர் சிட்டி குழு இருக்கிறது. பின்னிரவு 12.30 மணிக்குத் தொடங்கும் ஆட்டத்தை வெல்லும் பட்சத்தில் இபிஎல்லின் 26 ஆண்டு கால வரலாற்றில் அதிவேகமாக, அதாவது ஆறு ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் பட்டம் வென்ற குழு என்ற சாதனையை சிட்டி படைக்கும். இரண்டாம் நிலையிலுள்ள யுனைடெட்டைவிட 16 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் நிலையில் இருக்கும் சிட்டி இபிஎல் பட்டம் வெல்வது பெரும்பாலும் உறுதியாகி விட்ட நிலையில்,

அது எப்போது நடக்கும் என்பதே இப்போதைய கேள்வி. இவ்வார மத்தியில் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் லிவர்பூலிடம் 3=0 என அதிர்ச்சித் தோல்வி அடைந்த சிட்டி, இன்று யுனைடெட்டை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் துடிப்புடன் உள்ளது. கடந்த பருவத்தில் சிட்டியின் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற பெப் கார்டியோலாவுக்கு முதல் பருவம் சற்று ஏமாற்றம் அளித்தபோதும், இம்முறை வெற்றிகரமான குழு வாக சிட்டியை உருமாற்றியுள்ளார். அக்குழு, லிவர்பூலுக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் மட்டும் 4=3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.