கோல்டு கோஸ்ட்: சிங்கப்பூரின் உடற்குறையுள்ள நீச்சல் வீரரான டோ வெய் சூங் (படம்) காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் அவர் பங்கெடுப்பது இதுதான் முதல்முறை. ஆண்களுக்கான எஸ்7 50 மீட்டர் எதேச்சைப்பாணி நீச்சல் போட்டியை 19 வயது டோ 29.83 வினாடிகளில் முடித்து மூன்றாவது இடத்தைப் பிடித் தார்.
முதல் இடத்தில் ஆஸ்தி ரேலிய வீரரும் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர்களும் வந்தனர். டோவுக்கு இரண்டு வயதி லிருந்து தண்டுவட அழற்சி உள்ளது. இந்தப் பிரச்சினை அவரது கால்களைப் பாதித்துள்ளது. இந்தச் சவாலையும் முறியடித்து டோ வெண்கலம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

