ரொனால்டோ இன்றி யுவென்டசை வீழ்த்திய ரியால் மட்ரிட் அணி

1 mins read

மேரிலேண்ட்: அனைத்துலக வெற்றி யாளர் கிண்ணப் போட்டியில் நேற்று காலை ரியால் மட்ரிட், யுவென்டஸ் அணிகள் பொருதின. இதில் ரியால் அணி யுவென்டசை 3=1 எனும் கோல் கணக்கில் வென்றது. இதில் சிறப்பு அம்சமாக, ரியாலின் கேரட் பேல் தொலைவிலிருந்து அற்பு த மாக கோல் அடித்தார். மார்கோ அசென்சியோ எஞ்சிய இரு கோல் களை போட்டார். ரியால் மட்ரிட்டி லிருந்து யுவென்டசுக்கு விற்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.