ஆகச் சிறந்த வீரருக்கான விருதை ஆறாவது முறையாகக் கைப்பற்றிய மெஸ்ஸி

ஆகச் சிறந்து காற்பந்து வீரருக்கான 'பலூன் டி ஓர்' விருதை ஆறாவது முறையாக பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் கைப்பற்றியுள்ளார்.

இந்தக் கௌரவமிக்க விருதுக்கு லிவர்பூலின் நான்கு ஆட்டக்காரர்கள் முன்மொழியப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரையும் மெஸ்ஸி பின்னுக்குத் தள்ளி விருதைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டார்.

இரண்டாவது இடத்தை லிவர்பூலின் வர்ஜல் வேன் டைக்கும் மூன்றாவது இடத்தை ரியால் மட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் பிடித்தனர்.

“பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது மூன்று சகோதரர்களின் வழிகாட்டுதலுடன் நான் எனது முதல் 'பலூன் டி ஓர்' விருதைப் பெற்றேன்.

“இன்று எனது மனைவி, பிள்ளைகளின் வழிகாட்டுதலுடன் எனது ஆறாவது 'பலூன் டி ஓர்' விருதை வென்றுள்ளேன்,” என்றார் மெஸ்ஸி.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity