உலகக் கிண்ணம்: ஜெர்மனியில் 17 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த ஜெர்மனி-ஸ்பெயின் ஆட்டம்

உலகக் கிண்ணம்: ஜெர்மனியில் 17 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த ஜெர்மனி-ஸ்பெயின் ஆட்டம்

1 mins read
0786f9d1-d7c2-40b4-ac0b-ea7431d28b70
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஜெர்மனி-ஸ்பெயின் ஆட்டத்தைக் கண்டுகளிக்கும் ரசிகர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜெர்மனி-ஸ்பெயின் ஆட்டம் 17 மில்லியன் ஜெர்மானிய பார்வையாளர்களை ஈர்த்தது.

இன்று திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த 'இ' பிரிவு ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் எதிர்பாராத விதமாக ஜெர்மனியை வீழ்த்தியது ஜப்பான். அந்த ஆட்டத்தை ஜெர்மனியில் 9.2 மில்லியன் பேர் பார்த்தனர்.

முன்னதாக, கோஸ்டா ரிக்காவை 7-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் பந்தாடியது.