மூன்று நாள்களில் மூன்று சாதனைகள் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை

மூன்று நாள்களில் மூன்று சாதனைகள் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை

1 mins read
5cf523a1-3cd1-4269-a7c0-6b2e1c07f23e
புதன்கிழமையன்று பெண்கள் 50 மீட்டர் நெஞ்சு நீச்சலில் தேசிய சாதனை படைத்தார் லெட்டிஷியா சிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நெஞ்சு நீச்சலில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்பதை மறுவுறுதிப்படுத்தியுள்ளார் சிங்கப்பூர் வீராங்கனை லெட்டிஷியா சிம். மூன்று நாள்களில் 50, 100, 200 மீட்டர் நெஞ்சு நீச்சல் பிரிவுகள் அனைத்திலும் தேசிய சாதனையை முறியடித்திருக்கிறார் 20 வயது சிம்.

தற்போது நடைபெற்றுவரும் சிங்கப்பூர் தேசிய நீச்சல் போட்டிகளில் இவர் சாதனைகளைப் படைத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற 50 மீட்டர் நெஞ்சு நீச்சலில் புதிய தேசிய சாதனை படைத்தார் சிம். 31.17 விநாடிகளில் நீந்தி 2018ல் ரொவேன் ஹோ படைத்த தேசிய சாதனையை இவர் முறியடித்தார்.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுசிங்கப்பூர்

தொடர்புடைய செய்திகள்