தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செய்லர்சுக்கு ஆடத் துடிக்கும் முன்னாள் சண்டர்லாண்ட் வீரர்

1 mins read
4fc2435c-f855-4232-853e-2fe65641077a
செய்லர்சில் சேர்ந்துள்ள பெய்லி ரைட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான லயன் சிட்டி செய்லர்சில் சேர்ந்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த சண்டர்லாண்ட் குழுவின் அணித் தலைவராக இருந்த பெய்லி ரைட்.

ஆஸ்திரேலிய வீரரான இவர், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அந்நாட்டு தேசிய அணியிலும் இடம்பெற்றார். இங்கிலாந்து காற்பந்துக் கட்டமைப்பில் இரண்டாம் நிலையில் இருக்கும் சாம்பியன்ஷிப் என்றழைக்கப்படும் லீக்கிற்கு முன்னேற சண்டர்லாண்டுக்கு உதவியவர் 30 வயது ரைட். இப்போது செய்லர்சுக்காகக் களமிறங்கத் துடிப்பதாக தற்காப்பு வீரரான இவர் கூறியுள்ளார்.

சென்ற பருவம் கைவிட்ட லீக் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றும் இலக்குடன் இருக்கிறது செய்லர்ஸ்.

“தனது திட்டத்தையும் இலக்கையும் (செய்லர்ஸ்) என்னிடம் தெரியப்படுத்திய அந்த நொடி முதல் நான் உற்சாகமடைந்தேன், ஊக்கமடைந்தேன்,” என்றார் ரைட்.

அண்மைய ஆண்டுகளில் செய்லர்ஸ், உள்ளூர் காற்பந்தில் இதுவரை கண்டிராத பல சிறப்பான விளையாட்டாளர்களை வாங்கியிருக்கிறது. அவர்களில் ஒருவராக ரைட் திகழ்கிறார்.

செய்லர்சில் ஈராண்டுகளுக்கு விளையாட வகைசெய்யும் ஒப்பந்தத்தில் ரைட் கையெழுத்திட்டார்.

குறிப்புச் சொற்கள்