ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை அளவு பங்கேற்பாளர்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை அளவு பங்கேற்பாளர்கள்

1 mins read
8715345d-b248-41e5-8280-963ab4ff819f
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவுள்ள ஆசிய ஒலிம்பிக் விளையாட்டரங்கமும் (வலது) டென்னிஸ் அரங்கமும். - படம்: ஏஎஃப்பி

ஹாங்ஜோ: சீனாவில் இவ்வாண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 12,527 பேர் பதக்கங்களுக்குப் போட்டியிடவுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், இதற்குமுன் இத்தனை பேர் பங்கேற்றதில்லை என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இம்முறை சீனாவிலிருந்து மட்டும் 600க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் பங்கேற்பர். ஆசிய ஒலிம்பிக் மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 45 நாடுகள், வட்டாரங்களைச் சேர்ந்த விளையாட்டாளர்களும் இப்போட்டிகளில் கலந்துகொள்வர்.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனீசியாவின் பலெம்பாங்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிட்டத்தட்ட 11,300 பேர் பங்கேற்றிருந்ததே இப்போதைய சாதனை.

ஆயினும், இம்முறை அந்த எண்ணிக்கை மேலும் 500 உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெறும் நோக்கில், ரஷ்யா, பெலருஸ் விளையாட்டாளர்களுக்கும் இம்முறை சிறப்பு அனுமதி வழங்கப்படலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.

சென்ற ஆண்டு உக்ரேன்மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, ரஷ்யா, பெலருஸ் விளையாட்டாளர்கள் அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்க பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை.

வரும் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 8ஆம் தேதிவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஹாங்ஜோ, ஷாவ்சிங், நிங்போ, ஜின்ஹுவா உள்ளிட்ட ஐந்து நகரங்களில் போட்டிகள் நடத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்