நட்சத்திரங்களை வரவேற்கத் திரண்ட ரசிகர்கள்

1 mins read
3a650557-a1e1-426d-8dfe-b8eb71734922
ரசிகர்களுடன் படமெடுத்துக்கொண்ட லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னணி இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான லிவர்பூல் சிங்கப்பூருக்கு வந்துள்ளது.

அடுத்த பருவத்திற்கு தயாராகும் நோக்கில் சிங்கப்பூரில் இரு நட்புமுறை ஆட்டங்களில் அக்குழு விளையாட இருக்கிறது.

ரிட்ஸ் கார்ல்ட்டன் ஹோட்டலுக்கு நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் வந்து சேர்ந்த லிவர்பூல் குழுவினரைக் காண கிட்டத்தட்ட 150 ரசிகர்கள் திரண்டிருந்தனர். லிவர்பூல் செந்நிறச் சீருடையுடன் தங்களுக்குப் பிடித்தமான ஆட்டக்காரர்களின் படங்களையும் கைகளில் ஏந்தியபடி அவர்கள் பேரார்வத்துடன் காத்திருந்தனர்.

லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்பும் ஆட்டக்காரர்கள் பலரும் நினைவுக் கையெழுத்திட்டும் அவர்களுடன் சேர்ந்து படமெடுத்தும் ரசிகர்களை மகிழ்வித்தனர்.

தேசிய விளையாட்டரங்கில் சனிக்கிழமை பயிற்சியில் ஈடுபடவிருக்கும் லிவர்பூல் குழு, அதே அரங்கில் ஞாயிற்றுக்கிழமை லெஸ்டர் சிட்டி குழுவையும் புதன்கிழமை பயர்ன் மியூனிக் குழுவையும் எதிர்த்தாடவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்