சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் (எஃப்ஏஎஸ்) அடுத்த தலைவ்ர தேர்தல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷெரட்டன் டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற சங்கம் நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் சந்திப்பு அது.
2021ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரைக்குமான தவணைக்காலத்துக்கு மறைந்த திரு லிம் கியா தோங் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பின் காரணமாக அவர் காலமானார். எஞ்சிய தவணைக்காலத்துக்கான தலைவரை நியமிக்க தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தற்போது துணைத் தலைவர் பர்னார்ட் டான் தற்காலிகத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
2022ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் சந்திப்பு நடைபெறுவதற்கு ஒன்பது நாள்களுக்கு முன்புதான் திரு லிம் மாண்டார். அதனால் சந்திப்பில் அடுத்த தலைவர் தேர்தலை நடத்தப் போதுமான கால அவகாசம் இல்லாததால் தற்காலிகத் தலைவராகத் திரு டான் நியமிக்கப்பட்டார்.

