ஆசிய விளையாட்டுகள்: டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியா

ஆசிய விளையாட்டுகள்: டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியா

1 mins read
68825494-7d98-4c35-aa96-cb5a06e9155d
குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை வெல்லவிருக்கும் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் (இடது), சாக்கெத் மைனேனி. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு சாக்கெத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஆகியோரைக் கொண்ட இந்திய இணை முன்னேறியுள்ளது. அதனைத் தொடர்ந்து இப்போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.

மைனேனி, ராம்குமார் இருவரும் தென்கொரியாவின் சியோங்சான் ஹோங், சூன்வூ குவோன் ஆகியோைரை 6-1, 6-7(6), 10-0 எனும் ஆட்டக்கணக்கில் வென்றனர்.

மைனேனி மூன்றாவது முறையாக ஆசிய விளையாட்டுகளில் போட்டியிடுகிறார். 2018ஆம் அண்டு ஆசிய விளையாட்டுகளில் அவர் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

முதன்முறையாக ஆசிய விளையாட்டுகளின் இறுதிச்சுற்றில் களமிறங்குகிறார் ராம்குமார்.

குறிப்புச் சொற்கள்