தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சாந்தி பெரேரா

1 mins read
fe4d323a-8c4f-4ba4-a969-d16a7481a2e1
முன்னைய போட்டி ஒன்றில் சாந்தி பெரேரா (இடது). - படம்: ஏஎஃப்பி

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுகளின் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா முன்னேறியுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தகுதிச் சுற்றில் மூன்றாவதாக முடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் சாந்தி.

சீனாவின் ஹாங்ஜோ நகரில் உள்ள ஹாங்ஜோ ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் அவர் எடுத்துக்கொண்ட நேரம் 11.42 விநாடிகள். பஹ்ரேனின் ஹாஜார் அல்கால்டி, தாய்லாந்தின் சுப்பானிக் பூல்கர்ட் ஆகியோருக்கு அடுத்த நிலையில் சாந்தி வந்தார்.

சாந்தி பங்கேற்றது பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான இரண்டாவது தகுதிச் சுற்று.

மொத்தம் மூன்று தகுதிச் சுற்றுகள் நடைபெறும். அவற்றில் முதல் இரண்டு இடங்களில் வரும் போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு உடனடியாகத் தகுதிபெறுவர்.

மூன்று தகுதிச் சுற்றுகளிலும் மொத்தமாக அவர்களுக்கு அடுத்தபடியாக ஆக வேகமாக ஓடும் இருவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவர்.

பெண்கள் 100 மீட்டர் இறுதிச் சுற்று சனிக்கிழமையன்று நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்