தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய விளையாட்டுகளில் வரலாறு படைத்த இந்தியா

1 mins read
6655f7b0-b2e1-45c0-ab59-7d8b8f5b3541
துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளில் பதக்கங்களைக் குவித்தது இந்தியா. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளில் இதுவரை இல்லாத அளவில் அதிகமான பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.

விளையாட்டுகள் நிறைவடைய இன்னும் மூன்று நாள்களுக்கும் மேல் இருக்கும் வேளையில் இந்தியா இச்சாதனையைப் படைத்துள்ளது.

அண்மைக் காலமாக உலகளவில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா படிப்படியாக மேம்பட்டு வருகிறது. சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்றுவரும் இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளில் அதன் வெற்றிப் பயணம் தொடர்கிறது.

இதற்கு முன்பு ஆசிய விளையாட்டுகளில் அதிகபட்சம் 70 பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றிருந்தது. இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளில் இந்தியா 70 பதக்கங்களை வென்றது.

இம்முறை இப்போதே அந்த எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளில் துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளில் இந்தியா பதக்கங்களைக் குவித்தது.

குறிப்புச் சொற்கள்