சிங்கப்பூரின் தோ வெய் சூங்கிற்குத் தங்கம்

சிங்கப்பூரின் தோ வெய் சூங்கிற்குத் தங்கம்

1 mins read
7e6a0307-9bc2-43f0-b296-fac7f79e28d5
இவ்வாண்டின் சிறப்புத் தேவையுடையோருக்கான ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் நீச்சல் வீரர் தோ. - படம்: ஸ்போர்ட் எஸ்‌ஜி

குவாங்ஜோ: சிறப்புத் தேவையுடையோருக்கான ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் எஸ்7 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் தோ வெய் சூங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இது, இவ்வாண்டின் சிறப்புத் தேவையுடையோருக்கான ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் வென்றிருக்கும் முதல் தங்கப் பதக்கம்.

இதற்கு முன்பு சிறப்புத் தேவையுடையோருக்கான ஆசிய விளையாட்டுகள், ஒலிம்பிக் விளையாட்டுகள் என பல போட்டிகளில் தோங் பங்கேற்றிருக்கிறார். இருந்தாலும் அவரிடம் ஒருவகை பதற்றம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதை நன்கு எதிர்கொண்டு தங்கமகனாக விளங்குகிறார் 25 வயது தோ.

14.99 விநாடிகளில் போட்டியை முடித்து தோ வாகை சூடினார். சீனாவின் யாங் ஹுவாசியாங் வெள்ளிப் பதக்கம் வென்றார். வெண்கலம் அந்நாட்டின் ஹுவாங் சியான்சுவானுக்குச் சென்றது.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 சிறப்புத் தேவையுடையோருக்கான ஆசிய விளையாட்டுகளின் இதே பிரிவில் தோ வெண்கலப் பதக்கம் வென்றார்.

குறிப்புச் சொற்கள்