எட்டாவது முறையாக விருது வென்ற மெஸ்ஸி

1 mins read
6b2ede86-bb5e-4fd3-b655-a1c2b8f39894
‘ஃபிஃபா’ சிறந்த வீரர் விருதுடன் லயனல் மெஸ்ஸி. - படம்: இபிஏ
multi-img1 of 2

பாரிஸ்: உலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) சிறந்த காற்பந்து வீரர் விருதை அர்ஜெண்டினா மற்றும் இன்டர் மயாமியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக வென்றுள்ளார்.

கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட மெஸ்ஸி அர்ஜெண்டினா கிண்ணம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

அப்போட்டியில் அவர் ஏழு கோல்களைப் போட்டு மிகச் சிறந்த ஆட்டக்காரர் விருதைத் தட்டிச் சென்றார்.

அதுமட்டுமல்லாது, கடந்த பருவத்தில் அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.

விருதுக்கான வாக்களிப்பில் மான்செஸ்டர் சிட்டியின் எர்லிங் ஹாலண்ட் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

எம்பாப்பே மூன்றாவது இடத்தையும் கெவின் டி பிராய்ன நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

குறிப்புச் சொற்கள்