தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முழுகவனமும் கோப்பா அமெரிக்காவில் தான் உள்ளது: மெஸ்ஸி

1 mins read
2edbf1c7-c36e-4311-9c43-96504492a226
காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்ற உற்சாகத்தில் மெஸ்ஸி - படம்: ஏஎஃப்பி

போனஸ் ஏரிஸ்: தன்னுடைய முழுகவனமும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை தக்கவைத்துகொள்வதில் தான் இருக்கிறது என்று அர்ஜென்டினா காற்பந்து அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான லயனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கு பிறகு அனைத்துலக காற்பந்து ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகம் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் நடந்த 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டி தான் தமது கடைசி உலகக் கிண்ணப் போட்டி என்று கூறியிருந்தார் 36 வயது மெஸ்ஸி.

இந்நிலையில் 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவில் நடக்கவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் தான் விளையாடக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

“என்னால் தொடர்ந்து நன்கு விளையாட முடிந்து, அணிக்கு பலமாக இருந்தால் அனைத்துலக காற்பந்து ஆட்டங்களில் பங்கேற்பேன், தற்போது கவனம் முழுவதும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்தில் தான் உள்ளது,” என்றார் மெஸ்ஸி.

2021ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த கோப்பா அமெரிக்கா கிண்ணப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றது. 2024ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கிண்ணப்போட்டி அமெரிக்காவில் ஜூன் மாதம் நடக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்