லண்டன்: கிறிஸ்டல் பேலசும் லிவர்பூலும் மோதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல்.
ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பேலஸ் முன்னுக்குச் சென்றது. அதற்குப் பிறகு தப்பாட்டம் காரணமாக அக்குழுவின் ஜோர்டன் ஆயு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டார்.
76வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் லிவர்பூல் நட்சத்திரம் முகம்மது சாலா. 91வது நிமிடத்தில் ஹார்வி எலியட் லிவர்பூலின் வெற்றி கோலைப் போட்டார்.
சாலாவின் கோல், அவர் லிவர்பூலுக்குப் போட்ட 200வது கோல். சாலா உட்பட ஐவர் மட்டுமே லிவர்பூலுக்கு அத்தனை கோல்களைப் போட்டிருக்கின்றனர்.
இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்வு என்று கூறிய சாலா, இப்பருவத்தின் பிரிமியர் லீக் விருதுக்கான போட்டியில் லிவர்பூலை மிகச் சிறப்பாக விளையாடுமாறு கேட்டுக்கொண்டார்.

