தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெஸ்ஸி, ரொனால்டோ மோதல்

1 mins read
1ad97b96-14dc-49a2-a585-e832e8e2e719
லயனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ. - படங்கள்: ஏஎஃப்பி

மயாமி: காற்பந்து நட்சத்திரங்கள் லயனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மோதவுள்ளனர்.

2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி விளையாடும் அமெரிக்காவின் இன்டர் மயாமி குழுவும் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ ஆடும் சவூதி அரேபியக் குழுவான அல்-நாசரும் சந்திக்கவுள்ளன. திங்கட்கிழமையன்று இன்டர் மயாமி இதனை அறிவித்தது.

இவ்விரு குழுக்களும் ரியாத் சீசன் கிண்ணப் போட்டியில் மோதும்.

முதலில் ஜனவரி மாதம் 29ஆம் தேதியன்று மயாமி, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங்டம் அரீனா விளையாட்டரங்கில் அல்-ஹிலால் குழுவைச் சந்திக்கும். அதற்குப் பிறகு பிப்ரவரி ஒன்றாம் தேதியன்று அதே விளையாட்டரங்கில் அல்-நாசரைச் சந்திக்கும்.

குறிப்புச் சொற்கள்