மெஸ்ஸி அணிந்த 6 சட்டைகள் $7.8 மில்லியனுக்கு விலைபோயின

1 mins read
47e6f2db-24f4-4060-8783-81c8490ddccb
2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா சட்டைகள். - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: கத்தாரில் நடந்த 2022 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வாகை சூடியது.

போட்டியின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜெண்டினா அணியின் 6 சட்டைகள் நியூயார்க்கில் வியாழக்கிழமை ஏலத்திற்கு விடப்பட்டன.

அந்த 6 சட்டைகளும் 7.8 மில்லியன் வெள்ளிக்கு விலைபோனதாக ஏல நிறுவனமான சோத்பி’ஸ் தெரிவித்தது.

இந்த ஆண்டில் விளையாட்டு வீரருக்கு தொடர்புடைய ஒரு பொருள் இவ்வளவு பெரிய தொகைக்கு விலைபோனது இதுவே முதல்முறை என்றும் சோத்பி’ஸ் குறிப்பிட்டது.

ஏலம் போன 6 சட்டைகளில் ஒன்று பிரான்சுக்கு எதிரான இறுதியாட்டத்தில் மெஸ்ஸி அணிந்திருந்த சட்டைகளில் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கல் ஜோர்டன், 1998 ஆம் ஆண்டு நடந்த ‘என்பிஏ’ போட்டியின் இறுதியாட்டத்தில் அணிந்திருந்த சட்டை 10.1 மில்லியனுக்கு ஏலம்போனது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்