பர்ன்லியை வெற்றி கண்ட லிவர்பூல் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது

பர்ன்லியை வெற்றி கண்ட லிவர்பூல் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது

1 mins read
2f9d7e42-ac0a-4112-9052-b736821b4458
பர்ன்லிக்கு எதிராக முதல் கோலைப் போட்டார் லிவர்பூலின் டார்வின் நுனேஸ். - படம்: இபிஏ

லண்டன்: பர்ன்லியைத் தோற்கடித்து, இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் லிவர்பூல் குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப், எஞ்சியிருக்கும் பருவம் முழுவதும் அங்கேயே இருக்க முனைப்புடன் செயல்படுவார் என்று தெரிகிறது.

டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில், லிவர்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் பர்ன்லியை வெற்றி கண்டது.

“இப்போது 42 புள்ளிகள் எடுத்துள்ளோம். இந்தப் பருவத்தின் முதல் பாதி முடிந்துவிட்டது. இந்நிலையில் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது குழுவுக்கு மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் கிளோப்.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் லிவர்பூல் குழுவின் டார்வின் நுனேஸ் முதல் கோலைப் போட்டார். ஆட்டம் முடியும் தருவாயில் அக்குழுவின் டியோகோ ஜோட்டா இரண்டாவது கோலைப் போட்டு தனது குழுவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்