‘ரியால் மட்ரிடில் நீண்ட காலம் இருக்க ஆசை’

மட்ரிட்: ஸ்பானி‌ஷ் காற்பந்து குழுக்களில் மிக முக்கியமான அணி ரியால் மட்ரிட். தற்போது அதன் பயிற்றுவிப்பாளராக இருக்கும் கார்லோ அன்சிலோட்டிக்கு 2026 ஆண்டு வரை ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

64 வயதான அன்சிலோட்டி 2021ஆம் ஆண்டு ரியால் மட்ரிட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரின் ஒப்பந்தம் வரும் ஜூன் மாதத்துடன் முடிய இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு ஆண்டுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

“அணி நன்றாக செயல்பட்டதால் எனது ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும் வெற்றிகளைக் குவித்தால் ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படலாம். 2028ஆம் ஆண்டு வரை ரியால் மட்ரிட்டில் இருக்க எனக்கு ஆசை,” என்று அன்சிலோட்டி தெரிவித்தார்.

பிரேசில் தேசிய அணிக்கு அன்சிலோட்டி பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்படுவார் என்று பேச்சுகள் இடம்பெற்றநிலையில் அவர் ரியால் மட்ரிட் குழுவில் தொடர்வதாக அறிவித்தது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லீக் கிண்ணம், இரு சாம்பியன்ஸ் லீக் கிண்ணம், இரண்டு லீக் அணிகளுக்கான உலகக் கிண்ணங்களை வென்றுள்ளது ரியால் மட்ரிட்.

இத்தாலியரான அன்சிலோட்டி 2013 முதல் 2015ஆம் ஆண்டு வரை ரியால் மட்ரிட் அணியில் பயிற்றுவிப்பாளராக இருந்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!