எஃப்1: ஃபெராரி குழுவுக்கு செல்லும் ஹேமில்டன்

எஃப்1: ஃபெராரி குழுவுக்கு செல்லும் ஹேமில்டன்

1 mins read
3b6f0fd2-9250-4b5d-8749-0e378ec661ad
இதுவரை 7 முறை உலக கார் பந்தய கிண்ணத்தை வென்றுள்ளார் லூயிஸ் ஹேமில்டன். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் ஜாம்பவான் லூயிஸ் ஹேமில்டன் 2025 ஆம் ஆண்டு முதல் ஃபெராரி குழுவுக்கு கார் ஓட்டவுள்ளார்.

இதுவரை 7 முறை உலகக் கார் பந்தய கிண்ணத்தை வென்றுள்ள ஹேமில்டனின் இந்த முடிவு ஃபார்முலா ஒன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஹேமில்டன் மெர்சிடஸ் குழுவுடன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தார். அந்த ஒப்பந்தத்தில் இரண்டாவது ஆண்டை ஹேமில்டன் தேவைப்பட்டால் நிராகரித்துவிடலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை ஹேமில்டன் பயன்படுத்திக்கொண்டார்.

ஹேமில்டன் மெர்சிடஸ் குழுவுக்கு 11 ஆண்டுகள் கார் ஓட்டியுள்ளார்.

39 வயது ஹேமில்டன் தமது எட்டாவது உலகக் கார் பந்தய கிண்ணத்தை வெல்ல காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஃபார்முலா ஒன்னில் கால்பதிக்கத் தவறிய ஃபெராரி குழுவுக்கு ஹாமில்டனின் வருகை பெரும் பலத்தை சேர்க்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்