சிட்டி வெற்றி; ஃபோடன் அபாரம்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் பிரென்ட்ஃபர்டை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டர் சிட்டி.

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் நீல் மோப்பே முதலில் பிரென்ட்ஃபர்டை முன்னுக்கு அனுப்பினார்.

அதற்குப் பிறகு முற்பாதியாட்டம் நிறைவடையும் நேரத்தில் சிட்டியின் ஃபில் ஃபோடன் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

பின்னர் 53, 70வது நிமிடங்களில் ஃபோடன் மேலும் இரண்டு கோல்களைப் போட்டு சிட்டியை வெல்லச் செய்தார்.

“அவர் என்றுமே கோல் போட முயற்சி செய்பவர்,” என்று ஃபோடனைப் பாராட்டினார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா. “இந்தக் கட்டத்திலேயே அவர் 250 ஆட்டங்களில் விளையாடிவிட்டார். அதோடு, இந்தப் பருவத்தில் நிறைய கோல்களைப் போட்டுள்ளார். அவர் அபாரமாக விளையாடுகிறார்,” என்றும் கார்டியோலா குறிப்பிட்டார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து சிட்டிக்கும் லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் லிவர்பூலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் இரண்டு புள்ளிகளாகக் குறைந்தது. லீக்கில் லிவர்பூலைவிட சிட்டி ஓர் ஆட்டம் குறைவாக விளையாடியுள்ளது.

ஆட்டம் முழுவதும் சிட்டி, பிரென்ட்ஃபர்டுக்கு நெருக்குதல் தந்தது. அப்படியிருந்தும் பிரென்ட்ஃபர்ட் முதலில் முன்னுக்குச் சென்றது.

ஆனால் அதற்குப் பிறகு சிட்டி மீண்டு வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!