ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளார் ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை கைப்பற்றி அந்த மைல்கல்லை அஸ்வின் எட்டினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஒன்பதாவது ஆளாக அஸ்வின் இணைந்தார்.
98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் இந்தியா சார்பில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர். இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே இந்த சாதனைப் படைத்துள்ளார்.