சாம்பியன்ஸ் லீக்: காலிறுதிக்கு முன்னேறிய பயர்ன் மியூனிக், பிஎஸ்ஜி

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் குழுவும் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவும் முன்னேறியுள்ளன.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின் நடந்த ஆட்டத்தில் பயர்ன் மியூனிக் குழு இத்தாலியின் லாசியோ அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடிய ஹேரி கேன் 39, 66 நிமிடங்களில் கோல் அடித்தார். தாமஸ் மியூல்லர் 45வது நிமிடத்த்ல் கோல் அடித்து வெற்றியை உறுதிசெய்தார்.

நள்ளிரவுக்குப் பின் நடந்த மற்றோர் ஆட்டத்தில் ரியால் சோசிடாட் குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி வீழ்த்தியது.

பரபரப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜியின் கிலியன் எம்பாப்பே 15, 56வது நிமிடங்களில் கோல் அடித்தார். கடைசி வரை போராடிய சோசிடாட் அணி ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் அதன் முதல் கோலை அடித்தது.

கடைசி நிமிடங்களில் மேலும் எந்த தவறுகளும் நடக்காமல் இருக்க பிஎஸ்ஜி கவனமாக விளையாடி ஆட்டத்தை தன் வசப்படுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!