மெடெய்ரா: போர்ச்சுகலின் மெடெய்ரா பகுதியில் நடைபெறும் சிறப்புத் தேவையுடையோருக்கான ஐரோப்பிய பொதுவிருது நீச்சல் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யிப் பின் சியூ இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பெண்கள் எஸ்2 50 மீட்டர் மல்லாந்த நீச்சல் பிரிவில் வாகை சூடினார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நிமிடம் 5.14 விநாடிகள்.
இத்தாலியின் ஏஞ்சிலா பிரோசிடா இரண்டாம் இடத்திலும் எந்தத் தரப்பையும் பிரதிநிதிக்காத டயானா கொல்ட்சோவா மூன்றாம் இடத்திலும் முடித்தனர்.
இது, ஐரோப்பிய பொதுவிருதில் யிப் பங்கேற்றுள்ள கடைசி பந்தயமாகும்.
இவ்வாண்டின் சிறப்புத் தேவையுடையோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறும். அதில் பங்கேற்கவுள்ளார் யிப்.